பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2013

றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி: சூப்பர் ஓவரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது(வீடியோ இணைப்பு)

இந்தியாவில் நடைபெற்று வருகின்ற ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் இன்றைய 21வது லீக் போட்டியில் வீராட் கோஹ்லியின் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் ஜெயவர்த்தனவின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டு சூப்ப
ர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி டெல்லி அணியின் வார்னர்- சேவாக் களம் இறங்கினார்கள். வார்னர் 15 ஓட்டங்களிலும், சேவாக் 25 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வந்த ஜுனேஜா 17, ஜெவர்த்தனே 28 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
கடைசியில் களமிறங்கிய பதான் 8 பந்தில் 19 ஓட்டங்கள் விளாச டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ராகுல் 12, கெய்ல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் களமிறங்கிய கோலி- டிவில்லியர்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தது. இருவரும் அணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற நிலையில் டிவில்லியர்ஸ் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அப்போது பெங்களூர் அணி 16 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பெங்களூர் அணி வெற்றி பெற 24 பந்தில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 7 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 152 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ஆகவே, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து 16 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் வார்னர்- ரோரேர் களம் இறங்கினார்கள். ராம்பவுல் பந்து வீசினார். முதல் பந்திலேயே வார்னர் ஆட்டமிழந்தார்.
ஆப் சைடு அடித்த பந்தை பாயிண்ட் திசையில் கெய்ல் அருமையாக கேட்ச் பிடித்தார். இரண்டாவது பந்தை சந்தித்த பதான் பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் பதான் ஓட்டங்கள் எடுக்கவில்லை. 4வது பந்தில் பதான் அருமையான சிக்சர் ஒன்று அடித்தார்.
5வது பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்தார். 6வது பந்தை ரோரேர் சந்தித்தார். கடைசி பந்திற்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ராம்பவுலின் அருமையான யார்க்கரில் ரோரேட் கிளீன் போல்டானார். இதனால் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
PrintSendFeedback

Share/Bookmark