பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுதல்(ஐ.பி.சி 143), காவல்துறையின் உத்தரவை உதாசீனப்படுத்துதல்(ஐபிசி 188), பொதுமக்களுக்கு இடையூறு செய்தல்(ஐ.பி.சி. 151) ஆகிய பிரிவுகளுடன் வன்முறையை
தூண்டியதாக ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் இப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண மண்படத்தில் அடைக்கப்பட்ட இவர்களை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் 1 (பொறுப்பு) முகிலாம்பிகை இவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இதன்படி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.