பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2013





         ந்த மடத்தின் சாமியார்கள் ஒரு அடாவடிக் கும்பலுக்கு பயந்துபோய் எடுத்த விபரீத முடிவுகள், ஒட்டுமொத்த ஆன்மீக பக்தர்களையும் அதிரவைத்திருக்கிறது. சாமியார்களை மிரள வைத்தது யார்? சாமியார்கள் எடுத்த விபரீத விளைவு தான் என்ன?nakeeran

8-ம் தேதி திங்கட்கிழமை அதி காலை 4.30 மணி. கர்நாடக மாநிலம் பிதார் புறநகர் சுற்று வட்டார சாலை யில் உள்ள சவுளி மடத்தில் இருந்து மந்திர உச்சா டனங்கள் பக்தி மயமாய் ஒலிக்க ஆரம்பித்தன. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மடத்தின் தலைவராக இருந்த கணேஷ் அவதார் மஹாராஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டதால், அவரது ஆன்மா சாந்தியடையத்தான் யாகம் நடந்துகொண்டிருந்தது. மறைந்த சாமியார் கணேஷ் அவதாரின் சீடர் களான 45 வயது ஈராரெட்டி, 30 வயதான ஜெகனாத சாமி, 16 வயதான பிரணவ சுவாமி  ஆகியோர் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். சாம்பிராணிப் புகையும் சந்தனக்கட்டை எரியும் புகையும் அந்த அதி காலைக் காற்றை கமகமக்க வைத்தது. கோரஸாய் எழுந்த மந்திர உச்சா டனக்குரல் கேட்டு, பந்தோ பஸ்த்துக்காக வந்திருந்த காக்கிகள் விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கத்தொடங்கினர். சிறிது நேரத்தில் மந்திர ஒலிகளின் வேகம் கூடியது. உக்கிரமாக அது மாறியது. சிறிது நேரத்தில்  ஆ.. அய்யோ... அம்மா... என்கிற மரண ஓலமாக மாறியது. ஆரம்பத்தில் சிறியதாக எரிந்த யாகத்தீ, இப்போது மிகப் பெரிய நெருப்பாக மாறி, யாக சாலையையும் அருகிலிருந்த கட்டிடங்களையும் எரிக்க தொடங்கியது. தகிப்பும் எழுந்த கரும்புகையும் அந்த பிராந்தியத்தையே பதறவைத்தது.

பரபரப்பாக தீயணைப்பு வண்டிகள் வந்தன. அவர்கள் ஒரு மணி நேரம் போராடி நெருப்பை அணைத்தனர். பிறகு யாக குண்டத்தில் எரிந்த விறகு கட்டைகளை எடுத்துப் பார்த்தனர். அந்த விறகு கட்டை களுக்கு அடியில் மூன்று சன்னியாசிகளும் கருகிப் பிணமாக கிடந்தனர். 

அந்த மடத்தில் ஈராரெட்டி சுவாமி 7 வருடங்களாக வசித்து வந்தார். ஜெகன்னாத சுவாமிகளோ 15 வருடங்களாக சாமியாராக வாழ்ந்தார். வெறும் 16 வயதான பிரணவ சுவாமி கடந்த 2 வருடங்களாக சாமியாராக மடத்தில் தங்கி பக்தியில் திளைத்துவந்தார். 

சாமியார்களுக்கு என்ன நடந்தது? என்பதை இவர்களது அறைகளில் கிடைத்த கடிதங்களும் வீடியோ டேப்புகளும் உணர்த் தின. யாகத்துக்கு முன்பு அவர்கள் வீடியோ கேமராமுன் இப்படி பேசியிருக்கிறார்கள்.

""எங்களுக்கு தாய் தந்தையர் உறவினர்கள் சொந்த வீடு என எதுவும் கிடையாது. இறைவழிபாடும் ஆன்மீக பணிகளும்தான் வாழ்க்கை என வாழ்ந்தோம். சிவகுமார் என்கிற இளைஞரால் உருவாக்கப்பட்ட இந்த மடத்தை, சகய்ய சுவாமி என்கிற காவல்துறை அதிகாரிதான்,  ஓம்கார ரெட்டி என்பவர் கொடுத்த எட்டு ஏக்கர் நிலத்தில்  ஆசிரமமாகக் கட்டிக் கொடுத்து ஸ்தாபனம் செய்தார். 

நாங்கள் சிவனின் அவதாரமான சவுளி முதீயா என்கிற கடவுளை பூஜை செய்து வணங்கி வந்தோம். எங்களை மரணத்தின்       ஆவி சுற்றி வர ஆரம்பித்ததுதான் உச்சகட்ட சோகம். முதலில் சகய்ய சுவாமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். காரணம், பிதார்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் எங்களின் இந்த மடத்தின் நிலம் அதிக விலை மதிப்பு வாய்ந்தது. .எங்கள் மடத்து சொத்துக்கள் மீது குறிவைத்த  பசவ ராஜப்பா என்கிற லோக்கல் அரசியல்வாதி, எங்களை எல்லாம் விரட்டியடித்துவிட்டு மடத்தை முழுதாக அடைய விரும்பினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சகய்ய சுவாமி படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு எங்கள் மடத்தைச் சேர்ந்த மாருதி என்கிற சன்னியாசியும் பசவ ராஜப்பா ஆட்களால் கடத்தப்பட்டார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. 

ஆனால் மாருதி காணாமல் போனதால் மடத்தின் தலைவராக கடந்த 20 வருடங்களாக செயல்படும் எங்கள் குரு கணேஷ் அவதார் மஹராஜ் மிகவும் கவலை அடைந்தார். அவர்கள் ஒருநாள் எங்களிடம், இப்படி அரசியல் வாதிகளுக்கு பயந்து பயந்து வாழ்வதைவிட நாம் அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம். அப்பொழுதுதான் மாருதியை கடத்தி கொலை செய்த லோக்கல்  வி.ஐ.பி.க் களுக்கும் இந்த உலகத்திற்கும் நமது பக்தியின் வலிமை புரியும் என்றார்.

அவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நாங்களும் யாக தீயில் எங்களை எரித்து எங்கள் குரு காட்டிய வழியில் அவருடன் இணைகிறோம். எங்கள் சாவு, நிலம், பணம், பதவி இதையெல்லாம் தாண்டிய ஒரு ஆன்மீகப் பாதையை உலகுக்கு உணர்த் தட்டும்'' என உருக்கமுடன் சொல்லியிருக்கிறார் கள்.

’""ஒரே மாதிரி சிந்தனையுடன் ஒரு குருவை அதிக விசுவாசத்தோடு பின்பற்றுபவர்கள் மத்தியில் மன அழுத்தம் ஏற்பட்டால், அது அவர்கள் மத்தியில் மிக வேகமாக தற்கொலை எண்ணமாக பரவும். இதேபோல ஒரு தற்கொலை சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஒரு மடத்தில் நடைபெற்றது. இது பரிதாபகரமான முடிவு'' என்கிறார் திருவேணி என்கிற புகழ்பெற்ற உளவியல் அறிஞர்.

பிற மடத்து சொத்துக்களை விழுங்க வெறியோடு அலையும் ஆபாச சாமியார் நித்தி போன்றவர்கள் இருக்கும் இந்த நாட்டில், அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அப்பாவி சாமியார்களும் இருக்கிறார்கள் என்பது பரிதாபத் துக்குரியது. 

-தாமோதரன் பிரகாஷ்