பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2013


திமுக நிர்வாகிகளுடன் மு.க.அழகிரி திடீர் ஆலோசனை
திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி  இன்று திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் முன்னாள் எம்.பி. அக்னிராஜ் வீட்டுக்கு சென்றார்.
அவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த மு.க. அழகிரி, அக்னிராஜூவிடம் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.


பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், திருநகர் 7-வது பஸ் நிறுத்தம் அருகே இருந்த தனது பழைய வீட்டுக்கு சென்றார். அங்கு பழைய நண்பர்களிடம் மு.க.அழகிரி நலம் விசாரித்தார்.


அப்போது புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் எம்.எல். ராஜ், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் காசிமாயன், நகர பொறுப்பாளர் பரமேஷ் பாபு, கொம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், நெசவாளர் அணி துணை செயலாளர் உசிலை சிவா, பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க தலைவர் செல்வம், திருப்பரங்குன்றம் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் அக்னி ராஜ், பனையூர் தனபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.