பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2013


jvp-ltte2தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி உருத்தபுரம் என்னும் இடத்தில் இந்த பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்வதன் மூலம் குறித்த பதுங்கு குழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2004ம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007ம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
jvp-ltte1jvp-ltte3jvp-ltte4