பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2013

பரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 22-வது லீக் போட்டி இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கியது. இதில் புனே வாரியர்ஸ்-ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின.


முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக் காரர்களான பட்டெல் 12 ரன்னிலும், டி காக் 2 ரன்னிலும் வெறியேறினர்.

அந்த அணியில் அதிக பட்சமாக சமந்த்ரெ 37 ரன்கள் எடுத்தார். புனே அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய புனே வாரியர்ஸ் ஆரம்பத்தில் நிதானமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் கடைசியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக் காரர்கள் உத்தப்பா 22 ரன்னிலும், பின்ஜ் 16 ரன்னிலும் வெறியேறினர்.

இறுதியில் புனே வாரியர்ஸ் அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியில் அபாரமாக பந்து வீசிய மிஸ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.