படகு மூலம் இவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர். கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் படகுகள் வடிவமைப்பு மற்றும் அவர்கள் கையாண்ட தாக்குதல் உத்திகள் குறித்தும் சீனப் பாதுகாப்பு அமைச்சர், சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதியிடம் கேட்டறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |