பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2013



LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி

LTTEக்கு ஆசிய மற்றும் இரு ஆபிரிக்க நாடுகள் பாதுகாப்பு வழங்க இருந்தன! திருக்கிடும் தகவல் – கே.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 3 நாடுகள் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாக குமரன் பத்மநாபன் என்று அழைக்கப்படும் கே.பி தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துக்கான ஆயுதக் கொள்வனவில் பலகாலம் ஈடுபட்டிருந்த கே.பி 2009ம் ஆண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தார். தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ள அவர் அரசியல் களத்திலும் இறங்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியவண்ணம் உள்ளது. இதேவேளை இவ்வார இறுதியில் அவர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் 2008ம் ஆண்டு புலிகளுக்கு சுமார் 3 நாடுகள் பாதுகாப்பை வழங்க தயாராக இருந்ததாக கூறி புதுக் குண்டு ஒன்றைப் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் !

இரண்டு ஆபிரிக்க நாடுகளும், ஒரு ஆசிய நாடும் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த நாடுகள் என்று அவர் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை. அக் கேள்வியையும் அவர் தவிர்த்துகொண்டுள்ளார். இருப்பினும் போர் நடைபெற்ற காலப்பகுதியான 2008ம் ஆண்டிலேயே இது நடைபெற்றதாக அவர் மேலும் விபரித்துள்ளார். அத்துடன் தாம் 2008ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தி வந்த போதும், அவர் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் பின்னர், யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வது தொடர்பில் புலிகள் தன்னிடம் ஆலோசித்ததாகவும் இருப்பினும் அப்போது காலம் கடந்துவிட்டது என்றும் கே.பி மேலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் குறிப்பிடும் 2008ம் ஆண்டு போர் நிறுத்தமானது கோட்டபாயவால் நெறிப்படுத்தப்பட்டது ஆகும். விடுதலைப் புலிகள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்காது, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையவேண்டும் என்பதே அப்போதைய இலங்கை அரசின் போர் நிறுத்தமாக அறிவிக்கப்பட்டது. அப்படி என்றால் நிபந்தனை அற்ற சரணடைவையே அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு அடிபணியவில்லையே ! அவர்கள் இறுதிவரை போராடினார்கள். தற்போது வந்து 3 நாடுகள் உதவ இருந்தது 2 நாடுகள் உதவியது என்று கூறுவது எல்லாம் தன்னை நியாயப்படுத்த அவர் கூறும் கூற்றாக அல்லவா இருக்கிற