பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2013


மன்னாரில் எழுச்சி கொண்டது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மே தினக்கூட்டம்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மேதினக்கூட்டம் இன்று 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சிவசக்தி ஆனந்தன்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் வி.எஸ்.சிவகரன்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகர்,சர்வமதத்தலைவர்கள்,விவசாய,மீன்பிடி,வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள்,பொது மக்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரம்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் பிரமுகர்களினால் உரையாற்றப்பட்டது.
மதியம் 12.30 மணிவரை குறித்த மே தின கூட்டம் இடம் பெற்றது.