பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2013


லெபனான் சென்ற இலங்கை பணிப்பெண்ணின் இரு கைகள், தலை மாத்திரமே எஞ்சியது!

குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் (06) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.

குறித்த சடலம் தொடர்பில் சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அதனை சோதனை செய்துள்ளனர்.
அப்போது சடலத்தின் இரு கைகள் மற்றும் தலை மாத்திரம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாரவில வடக்கு துடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான டிலிகா மதுசானி என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண்ணின் சடலம் குப்பை கூளமொன்றிலிருந்து கடந்த 26ம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லெபனான் சென்ற பெண் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போயிருந்ததாகவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.