பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2013


அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை : தொண்டர்கள் உற்சாக வரவேற்ப
 பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (09.05.2013) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
பிரம்மதேசம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.  அந்த வழக்கிலும், பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திருக்கழுக்குன்றத்திலும், கடந்த ஆண்டு வன்னியர் இளைஞர் சித்திரை திருவிழாவில் பேசியது தொடர்பாக என மொத்தம் 3 வழக்குகள் அன்புமணி ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (09.05.2013) பிற்பகல் இந்த 3 வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கோர்ட். இதையடுத்து மத்திய புழல் சிறை வாசலில் பாமகவினர் பெருந்திரளாக வந்து  உற்சாக வரவேற்பு அளித்தனர்.