பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2013


திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் லிங்கநகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என தெரியவந்துள்ளது.
அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரதிற்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது நான்காம் தரத்தில் கல்வி பயிலும் வாய் பேசமுடியாத சிறுமி தனது ஆசிரியரிடம் இப்பிரச்சினையை தெரிவித்தன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.