பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2013


பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம், பேரணி நடத்த எண்ணி, கடலூர், சிதம்பரம் நகர்களில் பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள், வரவேற்பு தட்டிகள் பரவலாக வைக்கப்பட்டிருந்தன.; இந்தக் காரணத்தைக் காட்டி, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.