பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2013


மலேசியாவில் இடம்பெற்ற மே-18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள்
மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.
எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் தமிழர் இனஅழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நாளே தமிழர் இனவழிப்பு நினைவு நாள்.
கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுதல் கூடாது ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நான்காம் ஆண்டு நினைவில் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழீழத்தை தலைவர் காட்டிய வழியில் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி மொழி ஏற்போம் என கூறப்பட்டது.