பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013

மே 19ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இன அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அந்த இயக்கத்தின் நிர்வாகிகள்,

இலங்கை அரசு 20க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியுடன், தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து, மிகப்பெரிய இனப்படுகொலையை கடந்த 2009ல் செய்து முடிந்தது.
இதே இந்த தமிழர் கட-ன் கரையி-ருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத் தீவில் நாம் மற்றும் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். 2009ல் போராடாமல் மௌனம் காத்த கொடுமை உலகில் வெறெவ்ருக்கும் நடந்திருக்காது. நீதி கேட்டு தமிழர்களின் பயணம் 4 ஆண்டுகளைக் கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தான் தனிநாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இனப்படுகொலை என்ற சொல்லை மறைக்கப் பார்க்கிறது. உலகம் மறக்க நினைப்பதை மறுப்போம். தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறுவோம். கொல்லப்பட்ட மக்களுக்க்கு வீரவணக்கம் நினைவேந்துவோம்.
ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக 98 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் கூடுகிறார்கள். யூதர்கள் 60 ஆண்டுகள் கழித்தும் யூத இனப்படுகொலை அஞ்ச-க்காக கூடுகிறார்கள். தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் நாமும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் கூடி அஞ்ச- செலுத்த வேண்டும்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை உலகம் அறிவிக்க வேண்டும். இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கொண்டுவர வேண்டும். தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்த கருத்துப் பதிவுகளை சமூகங்களிடையே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரீனாவில் மே 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு கண்ணகி சிலையின் பின்புறம் நடைபெறுகிறது என்றனர்.