பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2013


கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
நயாகரா ஆற்றங்கரையோரத்தில் மீட்கப்பட்ட 21 வயதான சத்யராஜ் மகேந்திரன் என்ற கனடாவின் தமிழ் இளைஞனின் சடலம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கனடாவில் கிரேட்டர் டொரண்டோ நகரில் வசித்து வந்தவர் சத்யராஜ் மகேந்திரன் (வயது 21). தமிழரான இவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி காணவில்லை.
அதே நாளில், நயாகரா நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஆற்றங்கரையோரம் அவரது உடல் ஒதுங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக நயாகரா போலீசார் கடந்த 13 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மகேந்திரன் கொலை செய்யப்பட்டதாகவும், அவரை அவருடைய நெருங்கிய நண்பரான மற்றொரு தமிழர் தினேஷ் சுந்தரலிங்கம் (23) கொலை செய்ததாகவும் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து, சுந்தரலிங்கத்தை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.