பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2013

DSC07066 copy
மன்னர் மடு பகுதியில் அன்மையில் இந்திய அரசாங்கத்தின் உதியுடன் 27 வருடங்களின் பின் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வில் மன்னார் ஆயரின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் அன்மையில் நடந்த சிலிவ் சமூகக் கூட்டம் பற்றியும் அதில் கட்சியில் இடையில் ஏற்பட்ட கருத்து முறன்பாட்டால் கூட்டமைப்பு உடைந்ததா? அல்லது உடையுமா ?என கேட்டவண்ணமாக இருந்ததுடன் கூட்டமைப்பின் அந்தரங்கங்களை அறிய பலத்த பிரயத்தனம் எடுத்ததாக பங்கு பற்றிய ஒருவர் உறுத்ப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்தப் பதிவு குறித்து மன்னார் ஆயரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவையை கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மன்னார் ஆயரை நேரடியாகச் சந்தித்தபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு விசாரித்துள்ளார்.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நீடிக்கின்றதா? கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?’ என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துருவித்துருவி விசாரித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
கடந்த வாரம் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படத் தீர்மானித்துள்ளன எனவும், காலப்போக்கில் கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பில் தலைமைப்பீடம் முடிவெடுக்கும் எனவும் டக்ளசிடம் மன்னார் ஆயர் பதிலளித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
இதேவேளை, மன்னாரில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் மன்னார் ஆயரிடம் அமைச்சர் வினவியுள்ளார்.
இதற்கு மன்னார் ஆயர் பதிலளிக்கும்போது, ‘இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தம்மைத் தாமே ஆளக்கூடிய சுயாட்சியைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிகாரப்பகிர்வுடனான சுயாட்சியை நோக்கியே தீர்வு விடயத்தில் செயற்படத் தீர்மானித்துள்ளன’ என்று கூறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.