பக்கங்கள்

பக்கங்கள்

30 மே, 2013

தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி ஜனாதிபதியிடம் அன்புமணி மனு: பாமக
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி 29.05.2013 புதன்கிழமை மாலை
6 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைடெ ல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகள், குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலான கைது நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கியதுடன், அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி மனு அளித்தார். 
அதை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் அவர்கள் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இவ்வாறு பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.