பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2013

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி : நேரில் ஆஜராக உத்தரவு
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்குக் கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட
மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் நடந்த வழக்கு விசாரணைக்காக திமுக தலைவர் கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மருத்துவக் காரணங்களுக்காக அவர் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தில்லி நீதிமன்ற நீதிபதி, நேரில் ஆஜராக விலக்குக் கோருவதற்கான காரணங்கள் சரியாக இல்லாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும், இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூலை மாதம் 8ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.