பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2013

தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை 
 
கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் 09.05.2013 மாலை
நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.
 
அன்புமணி ராமதாஸ் சார்பில் திண்டிவனம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, தினமும் தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.  இதற்கான உத்தரவு புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.