பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2013

ஏழுமலையான் கோவிலுக்கு 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்கஆரம் காணிக்கை
 திருப்பதி ஏழுமலையானை பெயர் விவரம் வெளியிட விரும்பாத சென்னை பக்தர் ஒருவர் இன்று வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். 



பின்பு, அவர் கோவில் துணை அதிகாரி சின்னம்காரி ரமணாவை சந்தித்து ரூ.3 கோடி மதிப்புள்ள 10 கிலோ எடையிலான தங்க ஆரத்தை காணிக்கையாக வழங்கினார். அந்த தங்க ஆரம் மூலவருக்கு அலங்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.