பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2013




விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் 30.04.2013 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டது, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில், இன்று (10.05.2013) வள்ளியூர் நீதிமன்றம் கூடங்குளம் வழக்கில் ஜாமீன் அளித்தது. 
அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்திருப்பதால் ராமதாஸ் சனிக்கிழமை விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.