பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2013



7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 43 வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும்,  மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. போட்டியில்
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்  அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் எடுத்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. அணியில் அதிகப்பட்சமாக சுமித் 38 ரன்களும், ராயூடு ரன்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சர்மா மற்றும் மிஷ்ரா தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.  இதனை அடுத்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து விளையாடியது. ஐதராபாத் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிபட்ச மாக தவான் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். விகாரி 25 ரன்கள் எடுத்தார்.