பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2013


 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசன் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன் 24.05.2013 மும்பையில் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குருநாத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர் மும்பை போலீசார். ஆனால், குருநாத்தை வரும் மே 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. 
குருநாத் மெய்யப்பனிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் ஒரே நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சூதாட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளார். போட்டி நடக்கும்போது சூதாட்டத்திற்காக அவர் விண்டூவிடம் செல்போனில் பேசியுள்ளார். குருநாத் கூறியதை விண்டூ தரகர்களிடம் கூறியுள்ளார் என்று கோர்ட்டில் மும்பை போலீசார் தெரிவித்தனர்.