பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்.
ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.


இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்காண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது.

இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைச் செய்துள்ளனர்.

ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றப்படியால். ஆகவே இவ்வாறானதொரு தடைச் செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவுக்கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.