பக்கங்கள்

பக்கங்கள்

2 மே, 2013


மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது: வைகோ
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 


அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்படவேண்டும், மது ஒழிப்புக்காக மதிமுக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும், மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. அதற்கான நிதியளிப்புக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன என்று கூறினார். மேலும், ராஜீவ் கொலையாளிகள் மூவர் மரண தண்டனை விவகாரத்தில், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை செய்து, தண்டனைக் குறைப்புக்கு வழி செய்ய வேண்டும் என்றார்.