பக்கங்கள்

பக்கங்கள்

3 மே, 2013


மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில்
இடம் பெற்றன.
இந்தவேளையில் குறித்த அதிபரின் பையில் இருந்த ஒரு புத்தகத்தை அவரின் அனுமதியின்றி பையிலிருந்து எடுத்தமை சம்பந்தமாக எழுந்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதனை வேறு ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இரு சாராரும் தமக்கு சாதகமான விபரங்களை கூறுகின்ற போதிலும் ஆசியரும் அதிபரும் மாணவாகள் மத்தியில் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டமை பெற்றோர்கள் மத்தியில் பெரும் விசனத்தை எற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக வலிகாமம் கல்வி வலயத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.