பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2013


ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணி வெற்றி 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 55வது ஆட்டம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக மார்ஸ் 77 ரன்களும், கில்கிறிஸ்ட் 42 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. 
இதனை அடுத்து பேட்டிங் செய்து விளையாடி ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக ரெகானே 59 ரன்களும், சாம்சான் 47 ரன்களும், வாட்சன் 31 ரன்களும் எடுத்தனர்.