பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2013


தேசிய தலைவர் தப்பிச் செல்லவில்லையாம்: வலி நிறைந்த நாளில் சிறிலங்காவின் உளவியல் தாக்கம்

தமிழக காவற்துறையினர் வழங்கிய கைவிரல் அடையாளம் மற்றும் நந்திக்கடலில் மீட்கப்பட்ட பிரபாகரனின் சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல் அடையாளம் என்பன ஒத்துப் போகின்றனவாம்.
பிரபாகரன் தப்பிச் சென்று விட்டார் என செய்யப்பட்டு வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2009 ஏப்ரல் 29ம்  திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் சென்ற கடற்படையினர், புலிகளின் மூன்று படகுகளை அழித்து விட்டதாகவும் இதனால் எவரும் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சேபாலா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில், இந்திய அரசாங்கத்தினால் கோரப்பட்ட ஆதாரங்களை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைவிரல் அடையாளங்கள் பொருத்தமாக இருந்து இருப்பின், அவற்றை பகிரங்கப்படுத்தி சிறிலங்கா பெரு விழா எடுத்திருக்கும்.
எனவே, சிறிலங்கா அதிகாரியின் இந்த தகவலானது, தேசிய தலைவரின் இருப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இறுதிக்கட்ட போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் இந்த தகவல் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா படையினர் மிலேச்சதனமான தாக்குதலில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல்களை வலியுடன் தமிழர்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.
அவ்வாறான நிலையில், அவர்களை மனநிலையை குழப்பும் சிறிலங்காவின் உளவியல் நாடகம் இது என தெரிவிக்கப்படுகிறது.