பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2013

மன்னார் - செட்டிக்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 வீரர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் இரண்டு இராணுவ வீரர்களும் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியின் சாரதி ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த சிவிலியன் எனவும் இராணுவத்தினரால் வாடகைக்கு குறித்த லொறி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.