பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2013


சாத்தூர் ராமச்சந்திரன் சரணடைய உத்தரவு
 ஆள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கீழ்கோர்ட்டில் சரணடைய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தி.மு.க., முன்னாள் அமைச்சர்
சாத்தூர் ராமச்சந்திரன், மகன் ரமேஷ், உறவினர் சுப்பராஜ் தாக்கல் செய்த மனுவில்,

’’ஜே.எம்.கோஷ் என்பவர் தன்னை, ஏப்.,14 இரவு, 9:00 மணிக்கு, மல்லிஆறுமுகம், உதயசூரியன், சாலமோன் அழைத்துச் சென்றதாகவும், அடையாளம் தெரியாத, ஐந்து பேர், பெங்களூரு கடத்திச் சென்று, எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், பின் விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆள்கடத்தல், கொலைமிரட்டல் விடுத்ததாக, கிருஷ்ணன்கோவில் போலீசார், எங்கள் மீது, தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.எங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக, அரசியல் ஆதாயம் பெற, கோஷ் முயற்சிக்கிறார். எனவே,முன்ஜாமின் வழங்க வேண்டும்’’ என, குறிப்பிட்டு இருந்தனர்.
நீதிபதி, கே.பி.கே.வாசுகி உத்தரவில்,""மனுதாரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரணடைந்து, ஜாமின் மனு செய்யலாம். அதுவரை, மனுதாரர்களை போலீசார் கைது செய்யக்கூடாது. ஆட்சேபனை இருந்தால், போலீசார், அதே கோர்ட்டில் மனு செய்யலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.