பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013


த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.