பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் சமன்த்ரே அரைசதம் கடந்து 55 ஓட்டங்களும், சம்மி 23 ஓட்டங்களும், விஹாரி 19 ஓட்டங்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் பால்க்னர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இதில் டிராவிட் 25 ஓட்டங்களும், காப்பர் 26 ஓட்டங்களும், ரஹானே 12 ஓட்டங்களும்  எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
ஆட்டநாயகன் விருதை ஐதராபாத் அணி சார்பில் மிஸ்ரா பெற்றுள்ளார்.