பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

கூட்டணி இல்லை என்று அன்புமணி சொல்கிறாரே? மு.க.ஸ்டாலின் பதில்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்வி
ளுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார். 
கேள்வி: டாக்டர் ராமதாசை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றீர்களா? 
பதில்: டாக்டர் ராமதாசை பார்க்க செல்லவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் துறைமுருகனை பார்க்க சென்றேன். அவரது அறைக்கு எதிர் அறையில் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் நலம் விசாரித்தேன். 
கேள்வி: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறாரே? 
பதில்: எந்த திராவிட கட்சி இவர்களிடம் கூட்டணி வேண்டும் என்று கேட்டார்கள்? 
கேள்வி: ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? 
பதில்: அதுபற்றி கலைஞர்தான் முடிவெடுத்து அறிவிப்பார். 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.