பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2013


புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை சந்திக்க போராடிய மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி.!
சென்னை புழல் சிறையில் மருமகன் அன்புமணி ராமதாசை பார்க்க முடியாமல் அவரது மாமனார் கிருஷ்ணசாமி ஏமாற்றத்துடன்
திரும்பினார். மாமல்லபுரத்தில் பேச அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பேசியதாக கூறி சென்னையில் பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவரது தி.நகர் வீட்டில் வைத்து மாமல்லபுரம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் டாக்டர் அன்புமணியின் மாமனாரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான கிருஷ்ணசாமி நேற்று தனது மருமகனை சந்திக்க புழல் சிறைக்கு சென்றார். அவருடன் பாமக வழக்கறிஞர் பாலுவும் சென்றார். ஆனால் சனிக்கிழமை அன்று புழல் சிறையில் உள்ள கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் மட்டும் சந்தித்து பேசலாம் என்ற தகவல் கிருஷ்ணசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், தனது மருமகன் அன்புமணியை சந்திக்காமல் அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.