பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013


ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இப் போட்டியில் பூபதி-போபண்ணா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-ஜொனாதன்
மேரே ஜோடியை வீழ்த்தியது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்-ரடேக் ஸ்டெபானெக் ஜோடியை சந்திக்கிறது.
பயஸ் ஜோடி தோல்வி: அதேநேரத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர் ஜோடி 6-7 (4), 6-7 (3) என்ற நேர் செட்களில் மெக்ஸிகோவின் சன்டியாகோ கொன்ஸாலெஸ்-ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.