பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013


 

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப்
போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?
என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.