பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

ஷிம்லாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து : 18 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில்
18 பேர் பலியானார்கள்.
சிர்மௌர் மாவட்டம் சங்க்ராஹ் டெஹ்சில் பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று சுமார் 500 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காலை 7 மணியளவில் நடந்திருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது.