பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013


’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
புதிய தலைமுறை ஊடகத்தில் இன்று (18.06.2013) காலை முதல் வருவான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  நள்ளிரவைத்தாண்டியும் சோதனை தொடர்கிறது


சென்னை எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில்  செவ்வாய்க்கிழமை காலை 6 மணியில் இருந்து வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம், மருத்துவமனை, தொலைக்காட்சி அலுவலகம், எஸ்.ஆர்.எம். நிறுவன அதிபர் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவின் வீடுகள் மற்றும் அண்மையில் பச்சமுத்து தொடங்கிய வேந்தர் பிலிம்ஸ் அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்தது. 
இதுதவிர எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட் வடபழனி அலுவலகம், மருத்துவமனையின் மேற்கு மாம்பலம் அலுவலகம் போன்ற இடங்களில் இந்த சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் சுமார் 20 இடங்களில் நடந்த சோதனையில் ஒவ்வொரு இடத்திலும் 4 அதிகாரிகள் தலைமையில் 15 பேர் பங்கேற்றனர். 
சுமார் 4 மணி நேரம் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், புதிய தலைமுறையில் மட்டும் நள்ளிரவைத்தாண்டியும் சோதனை தொடர்கிறது.