பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2013


விழுப்புரம் கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராகவில்லை
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்கா ரெட்டிப்பாளையம் அருகே 1.6.2000-ல் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றும் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் திருமாவளவன் ஆஜராகவில்லை. சொந்த நிகழ்ச்சிகள் காரணமாக அவர் ஆஜராகவில்லை என்று திருமாவளவன் சார்பில் வக்கீல் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார். 
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி விஜய காந்த் (பொறுப்பு) உத்தரவிட்டார்.