பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2013

nagulan

காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணல் நகுலனுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த வி
ரும்புவதாகவும் மின்னஞ்சல் ஒன்று இனியொருவிற்கு அனுப்பப்பட்டது. சில நாட்களின் உள்ளாகவே பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினராகவிருந்த ஒருவர் நகுலன் தொலைபேசியில் பேச விரும்புவதாகவும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் கூறி தொடர்புகொண்டார். சில நாட்களில் நகுலனோடு பேசிய போது தாம் போராட்டத்தைத் தொடர விரும்புவதாகவும், புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்வதாகவும் அதன் அடிப்படையில் புதிய முறையில் போராடப்போவதாகவும் தெரிவித்தார்.
குறுகிய சில நாட்களில் புலிகளின் இலச்சனையுடன் மாவீரர் தின அஞ்சலி அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னதாக அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரை ஒன்றில் இலங்கை அரசிற்கோ இந்திய அரசிற்கோ எதிரான குறைந்தபட்ச வாசகங்கள் கூடக் காணப்படாமல், தேசியத் தலைவர், தமிழீழ தாயகம் என்ற வாசகங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து நகுலனிடம் கேட்டபோது, நாங்கள் பலமடைந்த பிறகே இலங்கை அரசிற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடப்போவதாகக் குறிப்பிட்டார்.
‘தேசியத் தலைவர்’ மக்களைப் பாதுகாக்கும் பணியைத் தம்முன்னால் விட்டுச் சென்றிப்பதாகவும் அதனைத் கவனமாக மேற்கொள்வதாகவும் கூறினார்.
இதனால் கட்டுரை வெளியிடப்படவில்லை என்பதோடு நகுலன் மீதான சந்தேகங்கள் வலுவடைந்தது.
கேணல் நகுலன் என்பவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிகப்பட்டது.
இன்று ஞாயிறு நீர்வேலியில் நகுலனின் திருமண வைபவம் நடைபெற்றதாகவும் அதன் போது இலங்கையில் புலனாய்வுத் துறைகள் பாதுகாப்பு வழங்கியதாகவும் முன்னை நாள் புலிப் பிரமுகர்கள் பலர் வைபவத்தில் கலந்துகொண்டதாகவும் இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை இந்திய மற்றும் உலக நாடுகளின் உளவுத் துறைகள் எவ்வாறு நுண்ணியமாகச் செயற்படுகின்றன என்பதற்கு நகுலனும், கேணல் ராம் எனப்வரும் வாழும் சாட்சிகள்.
இவர்களோடு இணைந்து ஈழ மக்களின் அவலத்தை வியாபாரமாக்கும் ஊடகங்கள் அப்பாவி மக்களின்
படுகொலைக்கு காரணமாகின்றன. ‘ சிங்கள ராணுவத்துக்கு சவால்” அடர்ந்த காட்டில் கேணல் ராம் பேட்டி!’ என்ற பரபப்புச் நேர்காணலை வெளியிட்டு நக்கீரன் இதழ் பணமாக்கிக்கொண்டது.
உலக அரசுகளின் உளவுப்படைகளோடும் அதிகாரவர்க்கத்தோடும் கைகோர்த்துக்கொண்டு இலங்கைப் பிரச்சனையைத் தீர்த்துவைக்கிறோம் என்று மக்களின் அழிவை மேலும் துரிதப்படுத்தும் பிழைப்புவாதிகளின் வலைப்பின்னலை உடைப்பது எம்முன்னுள்ள உடனடிப் பணி.


தவிர, வெறுமனே தேசியத் தலைவர், தமிழீழம், புலிகளின் தாகம் என்பன போன்ற வார்த்தைகளை மட்டுமே பயன்படுதிக்கொண்டு அப்பவிகளை உணர்ச்சிவ்சப்படுத்தி உளவு நிறுவனங்களும் பிழைப்புவாதிகளும் உரிமைக்கான போராட்டத்தையே திசை மாற்றலாம் என்பதற்கு நகுலன் ஒரு குறியீடு.