பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.