பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான
டெரிக்-இ-இன்சாப் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது.


அம்மாகாணத்தின் மர்தான் மாவட்டம் ஷெர்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி அப்துல்லா. பெட்ரோல் பங்க் அதிபர். அவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஹாஜி அப்துல்லாவின் இறுதி ஊர்வலம், ஷெர்கார் பகுதியில் நடைபெற்றது.
 அப்போது வெடிகுண்டு உடை அணிந்த ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகளை இயக்கி வெடித்துச் சிதறினான். இதில் இம்ரான்கான் மொகமந்த் உள்பட 27 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.