பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு: என்.ஐ.ஏ. அமைப்பு பகீர் தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.
மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் மத்திய மந்திரி மகேந்திர கர்மா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவர்களின் பயணம் குறித்து கட்சிக்குள் இருந்து தகவல் செல்லாமல் மாவோயிஸ்டுகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று மகேந்திர கர்மாவின் மகன் திபக் கர்மா சந்தேகம் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பாதையை மாற்றியது பற்றி தகவல் தெரிவித்துள்ளனர். தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் இந்த தகவல் தெரியவந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி இந்த சதியில் சம்பந்தப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச பா.ஜனதா தலைவர் நரேந்திர சிங் டோமர் ஏற்கனவே குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.