பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2013

வடமாகாணத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் பலாலியில் குடியேற்றுவோம்!- அமைச்சர் டக்ளஸ்
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கினால் 3 - 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம். அத்துடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்ற முடியும் என்று பாரம்பரிய சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
யாழ்.மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவா் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
இந்த அரசாங்கத்துடன் எமது பிரச்சனையை பேசித் தீர்வுகாணமுடியும் என்று நான் நம்புகின்றேன்.
யுத்தத்தினால் எமது மக்கள் பல பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்திருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து மக்களிற்கு சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திவிநெகும திட்டத்தினை கூட்டமைப்பினர் எதிர்த்தார்கள். இந்த திட்டத்தின் மூலம் 1 இலட்சம் பேர் நன்மை அடைந்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் துன்பத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடனும் சிந்தனையுடனும் கூட்டமைப்புச் செயற்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக பல விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் வந்தாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம்.
அத்துடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.