பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2013

6 மாதகாலத்திற்குள் 11 சிறுமிகள் யாழில் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை
தெரியவந்துள்ளது என தெரிவித்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் இளைஞர்கள் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலத்திற்குள் 16 வயதிற்குட்பட்ட 11 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலான புள்ளிவிபரத்தகவல்கள் ஆகும். ஆனால் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்பாக எம்மிடம் முறையிடப்படாமலும் உள்ளன.
இந்த விடயத்தில் பெற்றோர்களே பிள்ளைகளை அதிக அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். எமது நாட்டின் சட்டத்திற்கமைய 16 வயதிற்குட்பட்டவர்கள் திருமணம் செய்யமுடியாது. அவ்வாறு திருமணம் செய்கின்ற நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகளை எடுக்கமுடியும்.
காதலித்தவர்களை திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெ ளியே செல்கின்ற சிறுமிகளே இவ்வாறான சம்பவங்களால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனைப் பெற்றோரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார்.