பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2013

தமிழகத்திலுள்ள 9 மாவட்டங்களில் அம்மா உணவகங்களை இன்று முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னையில் ஏற்கனவே வார்டுக்கு ஒன்று 200 இடங்களில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது காலை 1 ரூபாய்க்கு
இட்லியும், மதியம் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதமும், 3 ரூபாய்க்கு தயிர் சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இரவில் சப்பாத்தியும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

அதேபோல், தமிழகத்திலுள்ள கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அம்மா உணவகம் இன்று திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 4.15 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இந்த உணவகங்களை திறந்து வைத்தார்.

இதேபோல், தற்போது சென்னையில் இயங்கி வரும் மலிவு விலை உணவகங்களில் பொங்கல், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதமும் கூடுதலாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றிற்கான விற்பனையையும் இன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.