பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

பழனி கோயிலில் தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்
கலைஞரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டும், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டமும் இன்று (06.06.2013) மாலை நடைபெற உள்ளது.
இதற்காக இன்று காலை திண்டுக்கல் வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். பின்னர் திண்டுக்கல் நகரில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்ற இளைஞர் அணி ஆய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனிடையே மு.க.ஸ்டாலினுடன் திண்டுக்கல் வந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின், பழனிக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்து, உச்சி கால பூஜையில் கலந்து கொண்டார்.
விஞ்ச் மூலமாக மலைக் கோயிலுக்கு சென்று வந்த துர்கா, பிறகு திண்டுக்கல் திரும்பிச் சென்றார்.