பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2013

ராஜீவ் காந்தி படுகொலை! இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி!- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் இந்திய- ரஷ்ய கூட்டுச் சதியின் பிரகாரம் நடைபெற்றதாக ரஷ்யப் பத்திரிகையொன்று பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் வெளிவரும் முன்னணி செய்திப் பத்திரிகைகளில் ஒன்றான Moskovskij Komsomolets  கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதுவித தொடர்புகளும் கிடையாது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஷ்யா நாட்டு உளவுத்துறை எஸ்விஆர் பிறப்பித்தது எனவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் ராஜிவ் காந்தி கொலையின் பின்னணியில் செயற்பட்டதாகவும், அவருக்கான உத்தரவுகள் சில ரஷ்யா உளவுத்துறையிடம் இருந்து அனுப்பப்பட்டதாகவும் பரபரப்பான தகவல்கள் அந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான பின்புலத்தில் இந்தியாவில் கிடைத்த வேற்று நாடுகள் சிலவற்றின் தொடர்புகள் மூலம் ராஜீவ் படுகொலை சம்பவம் நடைபெற்றதாகவும் அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.