பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

புங்குடுதீவில் முச்சக்கரவண்டி விபத்து - ஸ்தலத்தில் ஒருவர் பலி
புங்குடுதீவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஸ்தலத்திலேயே சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் மன்னாரைச் சேர்ந்த த.பரமேஸ்வரன் வயது 53 என்ற குடும்பத்தரே பலியானவராவார்.
தனது சகோதரியைப் பார்வையிட சென்றவேளையே இவர் விபத்திற்குள்ளாகி மரணமானதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.